Breaking

Post Top Ad

Friday, May 11, 2018

காட்டுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட புகையிரதம்! சம்பவ இடத்திலேயே காத்திருந்த பயணிகள்

கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து பதுளை நோக்கி சென்ற தபால் புகையிரதமும், பதுளை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால் புகையிரதமும் காட்டுப் பகுதியில் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த புகையிரதங்கள் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டுப் பகுதியில் இன்று அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டதன் பின் அதன் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கொழும்பு மற்றும் பதுளை பிரதேசங்களுக்கு சென்ற பயணிகள் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக தெரிவிக்கின்றனர்.

வட்டகொடை புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரி ஒருவருக்கும், புகையிரதத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாகவும், இதற்கு சரியான தீர்வு எட்டப்படவில்லை என தெரிவித்தும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் அதிகாரிகளுக்கும், பயணிகளுக்குமிடையில் வாய் தகராறு ஏற்பட்டதோடு, பயணிகள் தங்களின் வீடுகளுக்கு செல்லமுடியாமல் புகையிரதத்திலேயே காத்திருந்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக பயணிகளின் பாதுகாப்பு கருதி நாவலப்பிட்டி பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பயணிகள் நலன் கருதி இன்று காலை முதல் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக உடனடியாக உயரதிகாரியுடன் கலந்துரையாடல் ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்ததன் பின்னர் இந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages