Breaking

Post Top Ad

Friday, May 11, 2018

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் சாதனை படைத்த மாணவி!

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில், ஈட்டி எறிதல் போட்டியில் 39.12 மீற்றர் தூரம் எறிந்து, தி/மூ/பட்டித்திடல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை உயர்தரப் பிரிவு மாணவி நாகேந்திரம் உதயவாணி, 3ஆம் இடத்தைப் பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார்.

இம்மாணவியை, பாடசாலை சமூகத்தால் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, பாடசாலையில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸ், அதியாகக் கலந்துகொண்டார்.

மூதூர், தங்கநகர் எனும் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த இம்மாணவி மாத்திரமே, திருகோணமலை மாவட்டத்தில் இவ்வருடம் தெற்காசியப் போட்டியில் பதக்கமொன்றை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages