
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அப்பாடசாலையின் ஆசிரியை ஹைறியா நஜிமுடீனால் வரையப்பட்ட இராஜாங்க அமைச்சரது உருவ ஓவியமொன்றை இதன்போது வழங்கி வைத்தார்.
பின்னர், பாடசாலை அபிவிருத்தி மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடிய இராஜாங்க அமைச்சர், ஏற்கனவே அல் அமீன் வித்தியாலயத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக கடந்த மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 3 மில்லியன் ரூபா நிதியில் மேற்கொள்ளப்படுகின்ற கட்டிட நிர்மாணப் பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
வித்தியாலய அதிபர் எம்.எம். கலாவுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தற்போதைய காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான கே.எல்.பரீட், வலையக் கல்விப் பணிப்பாளர் எம். பதுர்தீன், உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவரகள் மற்றுமு; அதிகாரிகளும்; கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.