உரத்தை அதிக விலையில் விற்பனை செய்வோர் தொடர்பில் அறிவிப்பதற்கு தேசிய உர செயலகம் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிக விலையில் உரம் விற்பனை செய்யப்படுவதாக மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக செயலகத்தின் பணிப்பாளர் ஜீ.ஏ. புஷ்பகுமார தெரிவித்தார்.
அதிக விலையில் உரத்தை விற்பனை செய்பவர்கள் தொடர்பில், 011 2 887 447 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.
அத்துடன், 011 303 666 6 என்ற Fax இலக்கத்தினூடாகவும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.
இதனைத்தவிர, 1920 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அழைப்பினை ஏற்படுத்த முடியும் என உர செயலகம் தெரிவித்தது.
மேலும், இம்முறை சிறுபோகத்தை முன்னிட்டு மேலதிகமாக 36,000 மெட்ரிக் தொன் உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்தது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.