மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டிகள் நேற்று (21) திங்கட்கிழமை கரடியனாறு மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றன.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அஞ்சல் ஓட்டம், கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களும், பண்பாட்டு பாரம்பரிய, விளையாட்டு ஊர்வலமும், உடற்பயிற்சி கண்காட்சியும் இடம்பெற்றன.
குறித்த வலயத்தில், அனைத்து விளையாட்டுக்களிலும் பங்கேற்று அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் 163புள்ளிகளைப் பெற்று முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டது.
இதன்போது, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான, ஞா.சிறிநேசன், ச.வியாழேந்திரன் கிழக்கு மாகாண மேலதிகக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன், கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
(நன்றி - மட்டக்களப்பு செய்தி)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.