Breaking

Post Top Ad

Monday, May 28, 2018

சம்மந்தன் ஐயாவின் வேண்டுகோளுக்கு அமைவாகவே வடகிழக்கில் நாற்பதாயிரம் வீடுகள் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவிப்பு.

எதிர் கட்சி தலைவர் சம்பந்தர் ஐயாவின் வேண்டுகோளுக்கு அமைய வடகிழக்கில் 40000 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுவாமி­நா­தன் அண்மையில் தெரிவித்தார். 

தமிழ் மக்கள் மீது கொழும்பு அரசு அதிக அக்­கறை கொண்டு செயற்படவில்லை என்றால் 6 லட்சத்து 20 ஆயிரம் தமிழ் மக்களும் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்.

நல்லூர் கிட்டுப் பூங்காவில்  நடைபெற்ற உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது; வடக்கு கிழக்கில் அமைச்சின் ஊடாகப் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கல் வீடுகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அது இரண்டு வருடத்தில் நிறைவடையும் என்று எதிர் பார்க்கின்றோம்.

40 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தூண்டுதலாக இருந்தவர் சம்பந்தன் ஐயா என்பதை நான் குறிப்பிடவேண்டும். அவர்தான் அதற்கான தயார்ப் படுத்தலை என்னிடம் தந்து வீடுகள் வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு
அமைவாகத் தற்போது வீடுகள் அமைக்கப்படவுள்ளன என்று கூறினார்




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages