Breaking

Post Top Ad

Thursday, May 17, 2018

மண் அகழ்வில் ஈடுபட்டவர்களின் குற்றத்திற்கு தீதிபதியினால் அபராதம் விதிப்பு

மட்டக்களப்பு கித்துள் ஆற்றில் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் நன்கு இலட்சத்து 60 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

மட்டக்களப்பு கித்துள் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு உழவு இயந்திரங்கள், 6 சாரதிகள் 3 உதவியாளர்கள், மற்றும் மணல் ஏற்றி செல்வதற்கான விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் உழவு இயந்தரமொன்றும் சாரதியும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்யப்பட்டு கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.


கரடியனாறு பொலிஸார் குறித்த சந்தேக நபரை புதன்கிழமை (04) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர் செய்த போது குற்றவாளியாக இனங்காணப்பட்டு அபராதம் விதிக்கப்படுள்ளது

அபராதப் பணம் செலுத்திய பின்பு உழவு இயந்திரங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு போதிலம் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் தொடர்ந்தவண்மே உள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages