(S.t)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் முதன்மை இடத்தினை பெறுகின்றது கூத்துக் கலையாகும்.
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட நாவற்காடு கிராமத்தில் இருக்கின்ற கூத்துக் கலைஞர்கள் ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய கூத்தினை பழகி அரங்கேற்றி கூத்துக் கலையை பாதுகாத்து வருகின்றார்கள்.
அந்த வகையில் இந்த வருடம் (2018) மகாபாரதத்தின் இறுதிப் பகுதியான "வைகுந்தம்" வடமோடி குத்தினை பழகி இன்றைய தினம் (13/05/2018) காலை 9:00மணிக்கு சதங்கை அணிவிழா செய்திருந்தார்கள்.
அந்த கூத்தின் அண்னாவியாராக மா.ஞானசெல்வம் அவர்களும் கொப்பி ஆசிரியராக சி.நிமலனும் செயற்படுகின்றனர்.
இந்த "வைகுந்தம்" வடமோடி குத்தின் அரங்கேற்ற விழா எதிர்வரும் 27ம் திகதி ஈச்சந்தீவு ஸ்ரீ கன்னகியம்மன் ஆலயத்தில் இடம்பெற இருக்கின்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.