சிறைச்சாலையிலுள்ள பாதாள உலக குழு உறுப்பினருக்கு வழங்க, கொண்ட சென்ற பற்பசைக்குள் போதைப்பொருள் ஒழித்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளையில், எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியில்ல வைக்குமாறு காலி பிரதான நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். புஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் காலி சிறைச்சாலையில் உள்ள கைதியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதன் போது அவர் பாதாள உலக குழு உறுப்பினரருக்கு வழங்குவதற்காக பற்பசையை நீக்கிவிட்டு போதைப்பொருள் 4 பக்கட்டுகளை வைத்து கொண்டு சென்றுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கமைய பற்பசை பக்கட்டை வெட்டி பரிசோதிக்கும் போது இந்த போதை மருந்து கிடைத்துள்ளது. அத்துடன் அந்த பெண்ணையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பெண் பாதாள உலக குழு உறுப்பினருடன் தவறான தொடர்பினை வைத்திருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.