ஜனாதிபதி செயலனியின் முன்னாள் பிரதானி எல்.கே.மஹனாம மற்றும் மரக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த இருவரையும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கத்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான பங்கினை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு கைமாற்றுவதற்காக, குறித்த நிறுவனத்திடம் இருந்து 54 கோடி ரூபாயை இவர்கள் இலஞ்சமாக கோரியுள்ளனர்.
அந்த தொகையின் முற்பணத்தை பெற்றுக் கொண்ட வேளையில், இலஞ்சம் மற்றும் மோசடி தவிர்ப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இவர்களது பதவிகள் பறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Tuesday, May 22, 2018
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவால் பதவி பறிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமறியல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.