மேயர் பதவிக்காக வழங்கப்பட்ட வாகனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பதுளை மேயர் நிராகரித்துள்ளார்.
அவருக்காக வழங்கப்பட்ட இரண்டு கோடி ரூபாய் பணத்தை நகர அபிவிருத்திக்காக பயன்படுத்த அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இந்த பணம் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நகர சபையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அறிக்கப்பட்டது.
எனினும் பதுளை மாவட்டத்தின் புதிய மேயர் பிரியந்த அமரசிறி அந்த பணத்தை நகர அபிவிருத்திக்காக பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். அதற்கான அனுமதியையும் பெற்றுள்ளார்.
தற்போது உள்ள பழைய வாகனங்களில் ஒன்றை பழுது பார்த்து தனது பயன்பாட்டிற்காக வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நகரத்தில் பல குறைகள் உள்ள நிலையில் தனது பயன்பாட்டிற்கு அவ்வளவு பெறுமதியான வாகனம் அவசியம் இல்லை எனவும், நகர அபிவிருத்திக்கு முதன்மை இடத்தை வழங்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசியல்வாதிகள் ஆடம்பர கார்களுக்கு இலவசம் தேடும் போதும், பதுளை மேயரின் செயற்பாடு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.