Breaking

Post Top Ad

Tuesday, May 8, 2018

ஜே.வி.பியின் மேதினக் கூட்டத்தில் சுமந்திரன்! - பிள்ளையான் கட்சிக்கு சந்தேகம் !


சந்திரகாந்தன் பெரிய கட்சிகளின் அரசியல் புலத்திற்கு அடிமையாகி, அடிவருடிகளாக அவர்கள் பக்கம் சென்றிருந்தால் சிறையில் இருந்திருக்க மாட்டார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மேதின நிகழ்வு வாழைச்சேனை, கருணைபுரத்தில் திங்கட்கிழமை 7ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. 

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் மூன்று வருடங்களாக சிறையில் இருக்கின்றார்.
அவர் எந்த பெரிய கட்சிக்கோ, அரசியல் புலத்திற்கோ அடிமையாகி, அவர்களுக்கு அடிவருடிகளாக அவர்கள் பக்கம் சென்றிருந்தால் அவர் சிறையில் இருந்திருக்க மாட்டார்.



வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தை ஏற்றுக் கொள்ளாத கட்சிகளுடன் பேசுவதில்லை என்று கூறினார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பியின் மே தினக் கூட்டம் நடைபெற்றது.

அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.  வடக்கு, கிழக்கை பிரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த கட்சி ஜே.வி.பி, இவர்களின் வழக்குத் தாக்குதலின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டது.

அப்படியானால் ஜே.வி.பி வடக்கு, கிழக்கை பிரித்ததை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்களா? அதனால் தான்   ஜே.வி.பியின் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தாரா?.   எனவும் அவர் தெரிவித்தார்.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages