குச்சவெளி பொலிஸ் பிரிவில் வடிசாராயம் காய்ச்சும்போது பெண் ஒருவரும் வடிசாராயம் வைத்திருந்த ஆண் ஒருவரும் (12) சனிக்கிழமை இரவு திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
35 வயது குடும்பஸ்தரான இவரிடமிருந்து 20 லீற்றர் வடிசாராயம் வடிப்பதற்காக மூலப்பொருட்களை கலந்த கசாலம் எனப்படும் திரவம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் சிலாப பகுதியை சேர்ந்தவர் கடற்றொழில் செய்வதற்காக குச்சவெளி பிரதேசத்துக்கு வந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் அதே இடத்தில் பொலிஸார் வந்ததை அறிந்த நபரொருவர் தப்பி ஓடியபோது பொலிஸார் துரத்தி பிடித்ததில் அவரிடமிருந்து 6.5 லீற்றர் வடிசாராயம் கைப்பற்றப்பட்டது.
இருவரையும் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.