இச்செயற்றிட்டம் தொடர்பாக விவசாய அமைச்சின் வெளிக்கள
உத்தியோகத்தரால் விவசாயிகளுக்கு பயிற்சியுடன்
விளக்கமளிக்கப்பட்டுவருகின்றது. இத்தகைய விழிப்புணர்வு மாகாண விவசாய திணைக்களத்தின் நிந்தவூர் வலயத்திற்குட்பட்ட முதலாவது வைபவம் காரைதீவில் அண்மையில் நடைபெற்றது.
நிந்தவூப்பிரதேச உதவி விவசாயப்பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைக்கோலைப்பாவித்து கூட்டெரு தயாரிக்கும் முறையை செய்முறைப்பயிற்சியினூடாக விவசாயிகளுக்கு திணைக்கள அலுவலர்கள் விழிப்புணர்வை ஊட்டினர்.
விவசாய அமைச்சின் விவசாய ஊக்குவிப்பு விசேட செயற்றிட்டமான ‘ஒன்றாய்எழுவோம் இச்சிறுபோகத்தை வெல்வோம்’ என்ற திட்டம் தற்போது
நாடாளாவிய ரீதீயில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.