எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தெற்கு மாகாண சபை உறுப்பினர் சாம்பு ஆரியவன்ச மாட்டு வண்டியில் ஹிக்கடுவ பிரதேச செயலாளர் அலுவலகம் வரை சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் இந்த எதிர்ப்பு போராட்டம் நேற்று (11) ரத்கம சந்தியிலிருந்து ஹிக்கடுவ பிரதேச செயலாளர் அலுவலகம் வரை இடம்பெற்றிருந்தது.
குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில், ஹிக்கடுவ நகர சபை உறுப்பினர்கள் மற்றும் ரத்கம பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
இதுவா நல்லாட்சி, கழுத்தை நெறிக்கும் ஆட்சி போன்ற வாசகங்களை மாட்டு வண்டியிலும், சைக்கிள்களிலும் பொருத்திக் கொண்டு வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.