உணவு உண்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த மாணவன் மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று முல்லைத்தீவு, முத்தையன்கட்டில் இடம்பெற்றுள்ளது.
முத்தையன் கட்டு இடதுகரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் 9 இல் கற்கும் 14 வயதுடைய பி.தினேஸ்குமார் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.
நேற்றுப் பாடசாலையிலிருந்து சென்ற தினேஸ்குமார் உணவு உண்ண சமையல் அறையில் உணவை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.
அயலவர்களின் உதவியுடன் தினேஸ்குமார் ஒட்டுசுட்டான் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின் அங்கிருந்து மாஞ்சோலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் அந்த மாணவர் உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த மாணவனின் தந்தை போரில் உயிரிழந்துள்ளார். வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த இந்த மாணவனுக்கு பாடசாலை நிர்வாகத்தின் உதவியுடன் அண்மையிலேயே துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
முத்தையன்கட்டு, ஜீவநகரில் மின்னல் தாக்கம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது என்று என்று பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
நிலை (ஏத்) கோபுரம் இல்லாததே அதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Post Top Ad
Wednesday, May 16, 2018
உணவு உண்பதற்கு ஆயத்தமாகிய மாணவன் மின்னல் தாக்கியதில் உயிரிழப்பு!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.