Breaking

Post Top Ad

Thursday, May 31, 2018

தூத்துக்குடியில் பலியானோருக்கு கிழக்குப் பல்கலைக் கழகத்தில் அஞ்சலி


இந்தியா தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட 13 தமிழர்களின் ஆத்தமா சாந்தி வேண்டி வியாழக்கிழமை (31) கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் தீபம் ஏற்றி  அஞ்சலி செலுத்தினர்.



கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக கலைப்பிரிவு ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.



தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போடாட்த்தினபோது போராட்டக்கரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர்.

உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திவேண்டி கிழக்குப் பல்கலைக் கழக கலை காலாசார பீட மாணவ ஒன்றியத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages