Breaking

Post Top Ad

Thursday, May 31, 2018

இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம்

தேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம்
இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம் - 2018


இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக தேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம் மற்றும் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம் என்பன அனுஷ்டிக்கப்படுகின்றது.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரது குருபூஜை தினமாகிய மே மாதம் 31 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை 'இளம் சிறார்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு அறநெறிக் கல்வி தேவையென உணர்வீர்!' என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.


அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இவ்வாரத்தில் பல்வேறு செயற்றிட்டங்களை செயற்படுத்த புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் கௌரவ அமைச்சர் அவர்களது வழிகாட்டல் மற்றும் அமைச்சினது ஒருங்கிணைப்புடன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை இந்துமக்கள் மத்தியில்  ஏற்படுத்துதல்.
இந்து மாணவர்கள் கல்வி கற்கும் அனைத்துப் பாடசாலைகளும் இந்து மாணவர்களை அறநெறிப் பாடசாலைகளுக்கு செல்வதனை ஊக்கப்படுத்தவேண்டியதன் அவசியத்தை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்திற்கு உணர்த்துதல்.
ஆலயங்கள் தோறும் அறநெறிப்பாடசாலைகள் எனும் இலட்சிய வாசகத்திற்கு அமைவாக அறநெறிப் பாடசாலைகள் இல்லாத இடங்களில் அறநெறிப் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு ஆலய அறங்காவலர்கள் முன்வரவேண்டியதன் அவசியத்தை உணர்த்துதல் உள்ளிட்ட பல நோக்கங்களுக்கமைவாக மேற்படி கொடி தின நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages