நீர்வேலியில் கோயில் வைத்து வாள்வெட்டு நடத்தினர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவரின் விளக்கமறியலை நீடித்தது யாழ்ப்பாணம் நீதவான் நிதிமன்று.
சந்தேகநபர்களை அடையாள அணி வகுப்புக்காக நீதிமன்றில் நேற்று முற்படுத்திய போதும் சாட்சிகள் நடக்க முடியாத காரணத்தால் மன்றில் தோன்றவில்லை என பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது. அடையாள அணி வகுப்பை வரும் 22ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று ஒத்திவைத்தது.
நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் கடந்த 7ஆம் திகதி திங்கட்கிழமை இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசன் (வயது -23) என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்டும் கிரிகேசன் (வயது -23) காலில் படுகாயமடைந்தனர்.
Post Top Ad
Friday, May 18, 2018
நீர்வேலியில் வாளுடன் அட்டகாசம் செய்தோரின் நிலை! – நீதிமன்று வழங்கிய உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.