Breaking

Post Top Ad

Sunday, May 13, 2018

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள்

 (சிவம்)
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு இன்று (13) வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

2018 ஆம் ஆண்டுக்கான பிரகடனம் ‘தாதியர் குரல் மனிதகுலத்திற்கு சுகாதார சேவைகள் செய்வது ஆரோக்கிய உரிமையாகும்’ எனும் தொனிப்பொருளில்; உலகின்; தாதியர் ஸ்தாபகி புளோரன்ஸ் நைற்றிங்கேல் அம்மணியின் உருவச் சிலைக்கு சிரேஷ;ட தாதிய உத்தியோகத்தரால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.




ஓய்வு பெறும் மற்றும் புதவி உயர்வு பெற்ற தாதிய உத்தியோகத்தர்கள் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரணம் மற்றும் உயர் தரங்களில் சிறந்த அமைவு மட்டங்களைப் பெற்ற தாதியர்களின் பிள்ளைகளும் கௌரவிக்கப்பட்டனர்.



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி டானியல் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தாதியர்கள் மற்றும் தாதிய மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages