Breaking

Post Top Ad

Friday, May 11, 2018

உருளைக்கிழங்கிற்குள் ஹெரோயினைக் கடத்திய பாகிஸ்தான் பிரஜைக்கு இலங்கையில் மரண தண்டனை

உருளைக்கிழங்கு கொள்கலனுக்குள் மறைத்து வைத்து நாட்டிற்கு ஹெரோயினைக் கொண்டு வந்த குற்றச்சாட்டில் கைதாகி குற்றவாளியாகக் காணப்பட்ட பாகிஸ்தான் பிரஜைக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உருளைக்கிழங்கு கொள்கலனுக்குள் மறைத்து வைத்து 8.35 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டது



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages