Breaking

Post Top Ad

Tuesday, May 29, 2018

விமானப்படை முகாமிலிருந்து தப்பி ஓடிய தமிழ் வீரர் மட்டக்களப்பில் சிக்கினார்

திருகோணமலை சீனகுடா விமானப்படை முகாமில் இருந்து ரி 56 ரக துப்பாகி 90 தோட்டாக்கள் மற்றும் மூன்று ரவைக் கூடுகளுடன் தப்பியோடிய விமானப் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை மட்டக்களப்பு – திராய்மடு பகுதியில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானப்படைச் சிப்பாய் நேற்று காலை 2 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் சீருடையுடன் முகாமில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.

அவருக்கு வழங்கப்பட்டிருந்த 60 தோட்டாக்களுடன் இரண்டு ரவைக் கூடுகள் மற்றும் அவருடன் கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாயின் 30 தோட்டாக்கள் அடங்கிய ஒரு ரவைக் கூட்டை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


தொடர்புபட்ட செய்தி
 துப்பாக்கி, 90 தோட்டக்களுடன் காட்டுக்குள் தப்பிச் சென்ற தமிழ் சிப்பாய்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages