
கடந்த 11.05.2018 ஆம் திகதி சீனாவில் இருந்து ஹம்பாந்தோட்டை மாத்தறை அதிவேக வீதியின் வேலைக்காக சீனாவில் இருந்து தியகொட பிரதேசத்திற்கு தொழிலாளியாக வந்த நபர் ஒருவர் காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு காணாமல் போயிருந்தவர் சீனாவை சேர்ந்த 35 வயதுடைய ஜிந்தாவு என்பவராவார். அதன் பின்னர் இவர் இரவு 7 மணியளவில் தான் தங்கியிருந்த வேலைத்தளத்தில் இருந்து. வெளியில் சென்று வருவதாக தன்னோடு தங்கியிருந்தவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றிருக்கிறார்.
அதன் பின்னரே இவர் காணாமல் போனதாக சந்தேகிக்கப்பட்ட தியகொட ஆரணிய ஆற்றுக்கு அருகில் வைத்து இவருடைய தொலைபேசி, பாதணி, சட்டை ஆகியவை கிடைத்தன.
9 நாட்களுக்குபின் நேற்று மாலை உடஹபரக்க மஹா பெவுனக அசபுவ வீதியின் பேரகுட்டிய கிராமத்தின் நிமல் என்பவரின் வீட்டுக்கு அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனாந்தரம் ஒன்றில் உள்ள குழி ஒன்றினுள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.
ஹேவாதுகே சுனில் என்பவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் மூங்கில் வெட்ட இப்பிரதேசத்திற்கு வந்தபோது சத்தம் கேட்பதை அவதானித்து இருக்கிறார். அதன் பின்னர்ஒருவர் பாளடைந்த கிணற்றில் கிடப்பதை அவதானித்த விட்டு தியகொட பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்திருக்கின்றார்.
அதன் பின்னர் பொலிசார் 1990 990 சேவைக்கு அழைத்து குறித்த நபரை கிணற்றில் இருந்து மீட்டு மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவரை காப்பாற்றும் பணியில் மாத்தறை வைத்தியசாலையின் வைத்தியர்கள் பாரிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் 9 நாட்கள் இவர் எந்தவிதமான உணவும் இன்றி குழிக்குள் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.