பதுளை - ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடை - பதுளை பிரதான வீதியில் வேன் ஒன்று 80 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவரும் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து மேலும் தெரிய வருவதாவது,
கொழும்பிலிருந்து மரண சடங்கு வீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த வேன் நுவரெலியா - வெலிமடை வழியாக சென்று கொண்டிருக்கும் போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Post Top Ad
Saturday, May 19, 2018
80 அடி பள்ளத்தில் வேன் வீழ்ந்து விபத்து ; 3 பேர் காயம்
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.