மலேசிய பொதுத் தேர்தலில் 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பரிசான் நசனல் கூட்டணியை வீழ்த்தி அந்நாட்டு முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வரலாற்று வெற்றி ஒன்றை பெற்றுள்ளது.
இதன்மூலம் 92 வயதான மஹதிர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் வயதான தலைவராக இடம்பெறவுள்ளார். அரசியல் ஓய்வில் இருந்து மீண்டு வந்த மஹதிர் மொஹமது எதிர்க்கட்சியுடன் இணைந்து, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தனது முன்னாள் சீடரான பிரதமர் நஜீப் ரசாக்கை எதிர்த்து போட்டியிட்டார்.
இதன்மூலம் 1957 ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்றது தொடக்கம் அங்கு ஆட்சியில் இருந்த பரிசான் நசனல் கூட்டணியை வெளியேற்ற அவரால் முடிந்துள்ளது.
வெற்றி உறுதியானதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.
மக்களின் தீர்ப்பை ஏற்பதாக பிரதமர் நஜீப் அறிவித்தபோதும், ஒரு பாரிய அரசியல் மாற்றத்திற்கு பின்னர் சுமுகமான ஆட்சி மாற்றம் இழுபறிக்கு உள்ளாகலாம் என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.