(காரைதீவு நிருபர் சகா)
ஹொக்கி என்றால் என்னவென்று தெரியாத சூழலில் புதிதாக இளைஞர்களை இணைத்து
தொடர்ந்து 5வருடங்கள் அதிகாலையில் தொடர்பயிற்சியளித்ததன் பலாபலனே இன்று
கிழக்குமாகாணத்தில் எமது அணி சாம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
அதுவே தேசியமட்டப்போட்டியிலும் கலந்துகொள்வதையிட்டு
மகிழ்ச்சியடைகின்றேன்.
இவ்வாறு காரைதீவு ஹொக்கிலயன்ஸ் கழகத்தலைவரும் வவுனியா பொலிஸ்
போக்குவரத்துப்பிரிவு உத்தியோகத்தருமான தவராசா லவன் மகிழ்ச்சியுடன்
தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களம் நேற்றுமுன்தினம்(19) காரைதீவில் நடாத்திய மாகாணமட்ட ஹொக்கி போட்டியில் மட்டக்களப்பு திருமலை மாவட்டஅணிகளை வென்று மாகாணசாம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது.
அதனையடுத்து அந்த அணியின் ஸ்தாபகரான தலைவர் த.லவனிடம் இந்தச்சாதனை குறித்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
இந்த சாதனைக்காக 5வருடங்கள் கஸ்ட்டப்பட்டு உழைத்திருக்கின்றேன்.
காரைதீவில் ஹொக்கி லயன்ஸ் கழகத்தை ஆரம்பித்து புதிய இளம் வீரர்களை
பயிற்றுவித்துவந்தோம்.
எமது ஆலோசகர்களாக ஓய்வுநிலை வங்கிமுகாமையாளர் ச.ருத்திரன்
உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கமநலஅபிவிருத்தி உத்தியோகத்தர் மா.சிதம்பரநாதன் ஆகியோர் எமக்கு அவ்வப்போது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும்
ஆதரவையும் தந்துகொண்டிருந்தனர்.
ஹொக்கி என்றால் என்னவென்று தெரியாத நிலையில் பல இளம்வீரர்களை இணைத்து இன்று ஓரளாவது வளர்ந்துள்ளோம். கடந்த காலங்களில் மாகாணத்தோடு எமது தெரிவு முற்றுப்பெற்றது.
ஒரு தடவையாவது தேசியப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடவேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டிருந்தோம். இறையருளால் அதற்கு களம் தற்போது
அமைக்கப்பட்டுள்ளது.
சுனாமியில் நான் எனது தாய்தந்தையரை இழந்தேன். அதனால் நல்லுள்ளங்களின் முயற்சியால் நான் கண்டி திரித்துவக்கல்லுரியிலே இலவசமாகப் பயிலவாய்ப்புக்கிடைத்தது. அங்கு பயிலும் போது ஹொக்கி விளையாடினேன். அதில்
ஓரளவு தேர்ச்சி பெற்றேன். பின்பு பொலிஸ் போக்குவரத்துப்பிரிவில் இணைந்து அங்கும் இவ்விளையாட்டு எனக்கு கைகொடுத்தது.
அதனால் நான்பிறந்த மண்ணில் ஹொக்கி அணியை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஹொக்கிலயன்ஸ் கழகத்தை உருவாக்கி இன்றையநிலையை அடைந்துள்ளோம்.
Post Top Ad
Tuesday, May 22, 2018
Home
Ampara
sports
5வருட கடின உழைப்பின்பலனே மாகாணசாம்பியனானது! காரைதீவு ஹொக்கிலயன்ஸ் கழகத்தலைவர் லவன் கூறுகிறார்!
5வருட கடின உழைப்பின்பலனே மாகாணசாம்பியனானது! காரைதீவு ஹொக்கிலயன்ஸ் கழகத்தலைவர் லவன் கூறுகிறார்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.