யாழ். மாதகல் கடலில் ஆமை பிடித்த குற்றச்சாட்டில் அதேபகுதியைச் சேர்ந்த 47 வயாதான குடும்பஸ்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரிடமிருந்து 50 கிலோ எடையுடைய ஆமையொன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறைப் பொலிஸார் இன்று(11) தெரிவித்துள்ளனர்.வலைக்குள் மறைத்து ஆமை கொண்டுவரப்பட்ட நிலையிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் காங்கேசன்துறைப் பொலிஸ் அத்தியட்சகர் உடுவல சூரிய தலைமையிலான சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.இளவாலைப் பொலிஸார் கைதான சந்தேகநபரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.