Breaking

Post Top Ad

Sunday, May 13, 2018

விடுதலையை நேசித்த மகத்தான மனிதர் கனகரெத்தினம் ஆசிரியரின் 30வது ஆண்டு நினைவு தினம்

வாழ்கின்ற காலத்தில் பணிசெய்து வாழ்வது என்பது ஒரு சிலருக்கு மாத்திரம் உரித்தான ஒன்றாகும். இனப்பற்று,மொழிப்பற்று,மண்பற்று என்பன ஒருங்கே கொண்ட உன்னத தேசியவாதிதான்  ஆசான் மா.கனகரெத்தின் ஐயா அவர்களாகும்.

மட்டக்களப்பு, ஆரையம்பதியில் பிறந்து,வளர்ந்த கனகரெத்தினம் அவர்கள் ஆசிரிய பணி காலத்தில் விடுதலைப் போராட்டத்தில் தன்னால் இயன்றதை செய்யவேண்டும் என எண்ணி  தமிழ் இனத்திற்காக தன்னை அர்ப்பணித்து பயணித்தது மட்டுமல்லாது  தபோராளிகளையும் அளவுகடந்து நேசித்திருந்தார்.

தம் இனம் விடுதலை பெறவேண்டும் என்ற பேரவா இவர் மனதில் ஊறிப்போயிருந்த  பற்றுக்கொண்ட வாழ்வாகும். இவ்வாறாக விடுதலை உணர்வோடு பயணித்த நாட்டுப்பற்றாளர் கனகரெத்தினம் ஐயா அவர்கள் 13 .05.1988 அன்று  கொலை செய்யப்பட்டார்.

தமிழினத்தின் நல்வழிக்காக உழைத்த கனகரெத்தினம் ஐயாவை  தமிழினம் நினைவுகூருகின்றது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages