Breaking

Post Top Ad

Tuesday, May 8, 2018

2020 ஆம் ஆண்டில் நான் இளைப்பாறிப் பேகமாட்டேன் - மட்டக்களப்பில் ஜனாதிபதி மைத்திரி

பயம், சந்தேகம் நம்பிக்கையில்லாமல் வாழக்கூடிய சூழ்நிலையை எல்லா இன மக்களுக்கும் இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அரசியல்வாதிகள் நேர்மையாக செயற்பட வேண்டும் தமது அதிகாரத்தை பெறுவதற்காக மக்களை ஏமாற்றக்கூடாது. 

என மட்டக்களப்பு மாவடிவேம்பில்   நடைபெற்ற   சுதந்திரக் கட்சி மேதினக் கூட்டத்தில்    ஜனாதிபதி தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,



என்னைப் பார்த்து சொல்லியிருக்கின்றார்கள் 2020 ஆண்டில் இளைப்பாறவுள்ளீர்களா என கேட்கின்றார்கள். சமுக வலைத்தளங்களிலெல்லாம் நான் இளைப்பாறிச் செல்வேன் என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

இதைப்பற்றி நான் இன்று சொல்கிறேன், 2020 ஆம் ஆண்டில் நான் இளைப்பாறிப் பேகமாட்டேன். நான் இன்னும் செய்வதற்கு பல வேலைகள் இருக்கின்றது.

இந்த நாட்டிலே மக்கள்மீது அன்பு செலுத்தகின்ற அரசியல் தலைவர்கள்தான்எமக்குத் தேவை. 2020ஆண்டிலே புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்க சிலர் பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்றார்கள்.

தேசிய ஒற்றுமை எங்கு ஏற்படுகின்றதோ அங்கு நாங்கள் இருப்போம். இந்த நாட்டிலே ஏழ்மை வறுமையை எங்கு இல்லாமல் படுத்த முடியுமோ அங்கு நாங்கள் இருப்போம்.  என தெரிவித்தார்


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages