இது குறித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரையில் தொடங்கி வன்னியில் உள்ள முள்ளிவாய்க்கால் வரை தொடர்சியாக தமிழர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டு இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் மட்டும் இறுதி நாட்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து மிகப்பெரும் மனிதப் படுகொலை நடைபெற்ற மே 18 நினைவு நாளை தமிழினப் படுகொலை நாளாக பிரகடணப்படுத்தி உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது இடங்களில் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்தி துக்கம் அனுஷ்டித்து வருகின்றனர்.
இன்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம் ஆகிய நாம் மட்டக்களப்பில் உள்ள வர்த்தக நிலையங்கள், பொது நிறுவனங்கள் , வீடுகளில் கருப்புக் கொடிகளை தொங்க விட்டு மே 18 ஐ துக்க தினமாக அனுஸ்டிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மே 18 தமிழர்களின் வாழ்கையில் மறக்க முடியாத மன்னிக்க முடியாத நாள் தமிழர்களை படுகொலை செய்து தமிழர்களின் 60 ஆண்டுகால போராட்டத்தை முடக்கி தமிழர்களுக்கு எந்த அதிகாரத்தையும் வழங்காது தமிழர்களின் படுகொலைகளுக்கு நீதி வழங்காது 9 வருடங்களை கடத்திச் சென்றுள்ள அரசாங்கத்தின் கதவுகளை தட்டட்டும் மே 18 இல் நடக்கவிருக்கும் தமிழினப் படுகொலை நாள் நிகழ்வுகள் என்பதை வலியுறுத்துகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம்
(நிலா)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.