Breaking

Post Top Ad

Saturday, May 12, 2018

11 திருமணம் முடித்த பெண் கல்லெறிந்து மரண தண்டனை

சோமாலியாவில் பல ஆண்களை திருமணம் புரிந்த பெண் ஒருவர் அல் ஷபாப் குழுவின் நீதிமன்றத்தால் குற்றம் காணப்பட்டு கல்லெறிந்து கொல்லப்பட்டுள்ளார்.

ஷுக்ரி அப்துல்லாஹி வார்சம் தனது முந்தைய கணவர்களை விவாகரத்து செய்யாமல் 11 தடவைகள் திருமணம் புரிந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். கழுத்துவரை புதைக்கப்பட்ட அவருக்கு அல் ஷபாப் போராளிகளால் மரணிக்கும் வரை கற்கள் எறியப்பட்டதாக தெற்கு சபாலா நகர குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர்.

அல் ஷபாப் குழு ஷரியா சட்டத்திற்கு கடுமையான விளக்கங்களை கடைப்பிடித்து வருகிறது.

இந்த ஆயுதக் குழு சோமாலியாவின் கணிசமான பகுதியை தனது பிடியில் வைத்திருப்பதோடு தலைநகர் மொகடிசுவை மையமாகக் கொண்ட மத்திய அரசை கவிழ்க்க அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஷெபல்லா பிராந்தியத்தின் அல் ஷபாப் ஆளுநர் மொஹமது அபூ உசாமா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கூறும்போது, “ஷுக்ரி அப்துல்லாஹியின் சட்டபூர்வ கணவர் உட்பட ஒன்பது கணவர்மார் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டபோது ஒவ்வொருவரும் அவர் தனது மனைவி என்று குறிப்பிட்டனர்” என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages