Breaking

Post Top Ad

Tuesday, May 29, 2018

புன்னச்சோலை ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் வருடாந்த சடங்கு உற்சவம் 10ம் திகதி ஆரம்பம் - 15 தீ மிதிப்பு


(ராஜ்)

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான  மட்டக்களப்பு புன்னச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்   எதிர்வரும் 10 ஆம் திகதி   ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கதவு  திறத்தல்  வைபவத்துடன் அம்பாள் எழுந்தருளப் பண்ணலுடன்  பெருவிழா ஆரம்பமாகி எதிர்வரும்  15.06.2018 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை  தீ மிதிப்பு வைபவத்துடன் நிறைவுபெறும்



ஆலய உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட அபிஷேக அலங்கார பூசைகள்  ஆலயத்தில் நடைபெறும் .

ஆலய உற்சவத்தின் கல்யாணக் கால் வெட்டும் சடங்கு   13.06.2018  புதன்கிழமை மாலை இடம்பெற்று  வழமையான வீதியூடாக அம்பாள் வீதி வலம் வரும் நிகழ்வு இடம்பெறும் .

15 .06.2018 ஆம் திகதி   வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு வைபவம் நடைபெற்று   தொடர்ந்து பலிகருமப் பூஜைகளுடன்  அம்பாளின் வருடாந்த  சடங்கு உற்சவம் இனிதே நிறைவுபெறும்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages