Breaking

Post Top Ad

Wednesday, April 4, 2018

Live Blog: உடனுக்குடன் சுருக்கமான செய்தி ... பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

Live Blog: 
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 15 ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்போம் - ஹர்ஷ டி சில்வா


நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்போம் - ஹர்ஷ டி சில்வா


நாங்கள் எந்நேரமும் விலகிச்செல்ல தயாராகவுள்ளோம் - T. B. ஏக்கநாயக்க

இந்த அரசாங்கத்தை நான் பாதுகாப்பேன் - சதுர சேனாரத்ன

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது பிரதமருக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு


இந்த பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பாலானோர் நம்பிக்கையை இழந்துள்ளனர். அவர்கள் இதை உணர்ந்தும் உள்ளனர் - ரஞ்சன் ராமநாயக்க

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் - அகில விராஜ் காரியவசம் (unp)


பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க அத்துரேலிய ரத்தன தேரர் தீர்மானம்

ஊழல்வாதிகளைத் தண்டிக்கத் தவறிவிட்டார் பிரதமர் - அனுரகுமார திசாநாயக்க


மக்கள் விடுதலை முன்னணி பிரதமருக்கு எதிராக வாக்களிக்கும் - அனுரகுமார திசாநாயக்க

ஊடகவியலாளர் சந்திப்பில் வசந்த சேனநாயக்கவுடன் கலந்துகொண்டுள்ள பாலித ரங்கே பண்டார, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தாம் வாக்களிக்கப் போவதாக தெரிவித்தார். 

அர்ஜூன மகேந்திரன் விடயத்தில் பிரதமர் மீது பழி போடுவது நியாயமில்லை - சரத் பொன்சேகா 

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னதாக பிரதமர் பதவி விலக வேண்டும் - ரமேஷ் பத்திரண


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages