Breaking

Post Top Ad

Thursday, April 5, 2018

ஆயித்தியமலையில் சிறுமியின் சடலம் மீட்பு

ஆயித்தியமலை, பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர், கிராம வீடொன்றிலிருந்து சிறுமியொருவரின் சடலம்  இன்று (05) மீட்கப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.


நெல்லூர், பாடசாலை வீதியைச் சேர்ந்த, மகிழவெட்டுவான் வித்தியாலயத்தில் தரம் -09 இல் கல்வி கற்கும் சிவலிங்கம் திஷாந்தினி (வயது 16) என்ற பாடசாலை மாணவியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர்.

மேற்படி சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages